Category Archives: ஜெயமோகன்

ஊர்ப்பாசம்

ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் … Continue reading

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல் | Tagged , , , , , , | Leave a comment

ஜெயமோகனின் 100 கதைகள் – 4

நற்றுணை மற்றும் சிறகு கதைகளில் பெண் கல்விக்குத் தேவைப்படும் ஊன்று கோல்களைப் பற்றி பேசப்படுகிறது. அம்மணி தங்கச்சிக்கு கேசினி என்ற யட்சியின் இருப்பாகிய அகத்துணையும், ஆனந்தவல்லிக்கு சைக்கிள் எனும் வாகனத்தைக் கையாளும் திறன் தரும் புறத்துணையும் கல்வியில், பொருளாதாரத்தில் மேலே செல்ல உதவுகின்றன. தமிழ்ச் சூழலில் யட்சி எனும் தொன்மம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, ஜெயமோகன் | 3 Comments

ஜெயமோகனின் நூறு கதைகள் – 3

திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் இவ்வரிசையின் உச்சங்கள் என்றே சொல்லலாம். ராஜா கேசவதாஸ், வேலுத்தம்பி தளவாய் ஆகிய திவான்களின் வாழ்வை போழ்வு, இணைவு ஆகிய கதைகள் பேசுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகள் பத்மநாப சுவாமியின் கோவில் நிலவறைச் செல்வத்தைப் பற்றிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.   மந்திரவாதம் கற்றுக் கொள்பவர் … Continue reading

Posted in இலக்கியம், ஜெயமோகன், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , | 3 Comments

ஜெயமோகனின் நூறு கதைகள் – 2

இந்தக் கதைகளின் வரிசையில் முதல் கதையும், கடைசிக் கதையும் தற்கொலை எண்ணத்தை மையப்படுத்தியவை.  கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, அரசியல் என பலதளங்களிலும் இயங்கிய எம்.கே எனும் மாமனிதரின் இறப்புக்குப் பின் அவர் கேரள அறிவியக்கத்தில் ஏற்படுத்திய புத்தெழுச்சியைப் பற்றியும், அவரது வாழ்வைப் பற்றியும் சில அறிவுஜீவிகள் கூடிப் பேசிக் கொள்ளும் உரையாடலாக ஆரம்பிக்கிறது அவரது முதல் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, ஜெயமோகன், விமர்சனம் | Tagged , , , | 3 Comments

ஜெயமோகனின் நூறு கதைகள் – 1

கொரோனா காரணமாக எழுந்த ஊரடங்கு உத்தரவும், நோய் குறித்த அச்சமும் ஒரு சாராரை வீட்டுக்குள் முடக்கவும், இன்னொரு பக்கம் மக்களை பசியும் பட்டினியுமாக சாலைகளில் சாரை சாரையாக நடக்கவும் வைத்திருக்கிறது. இதில் வீதியில் விடப்பட்டோரின் வாழ்கை அவர்களின் கையில் இல்லை – அவர்களை நகர்த்திக் கொண்டு போகும் விதியின் வலிய கரங்களே அவர்களை என்ன செய்வதென்பதை … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, ஜெயமோகன் | Tagged , , , , , , | 3 Comments