Category Archives: படித்ததில் பிடித்தது

முன்னேறத் துடிக்கும் இளைஞனின் கதை

உடல் வடித்தான் நாவலின் களம் தமிழுக்குப் புதிது. மனித உடல் நலத்தின் அடிப்படையான உடலைப் பேணி வளர்க்கும் சூழல் குறித்து நானறிந்தவகையில் புனைவு ஏதும் படித்ததாக நினைவில் வரவில்லை. இந்த நாவலில் கதையினூடாக மட்டுமல்லாது, ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் உடற்பயிற்சிக் களங்களைப் பற்றிய நுண் தகவல்களை சிறு குறிப்புகளாகக் கொடுத்துச் செல்கிறார் ஆசாத். இது வாசகர்களுக்கு … Continue reading

Posted in இலக்கியம், நாவல், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஜெயமோகனின் நூறு கதைகள் – 3

திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் இவ்வரிசையின் உச்சங்கள் என்றே சொல்லலாம். ராஜா கேசவதாஸ், வேலுத்தம்பி தளவாய் ஆகிய திவான்களின் வாழ்வை போழ்வு, இணைவு ஆகிய கதைகள் பேசுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகள் பத்மநாப சுவாமியின் கோவில் நிலவறைச் செல்வத்தைப் பற்றிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.   மந்திரவாதம் கற்றுக் கொள்பவர் … Continue reading

Posted in இலக்கியம், ஜெயமோகன், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , | 3 Comments

எழுதாப் பயணம் – நூலறிமுகக் கட்டுரை – பத்மா அரவிந்த்

எழுதாப்பயணம்: நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடல் உபாதை மட்டும்தான். ஆனால் நம் குழந்தைகளுக்கு பிறந்த சில வாரங்களுக்குக்குள்ளாகவே சின்ன காதுவலியுடன் கூடிய சுரம் வந்தாலே அவஸ்தைப்படும் மனம். நாளாக நாளாக அந்த சுரத்திற்கு பழகிக்கொண்டாலும், மனவலி என்னவோ அதிகம்தான். நம் குழந்தைகள் விளையாட்டில் சின்ன அடி பட்டாலும் அதே போன்ற மனவலி நிச்சயம். … Continue reading

Posted in ஆட்டிசம், இலக்கியம், எழுதாப் பயணம், படித்ததில் பிடித்தது | Tagged , , | 2 Comments

பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது? – பாரதி

புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரையின் சுருங்கிய வடிவம். முழுக் கட்டுரையும் படிக்க விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும். ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு மன்று,பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம்விடுதலை. … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம் | Tagged , , , | 1 Comment

புதிரும் புத்தகமும்

நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சித்திரம் பேசேல் – புத்தக மதிப்புரை

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்கிறார் வள்ளுவர். அதிகாரம் என்பது கட்டற்றதாக இருந்துவிடக் கூடாது. அது ஒரு போதும் சமூகத்துக்கு நன்மை பயக்காது என்பதுதான் இதன் பொருள். சங்கப் பாடல்களைப் பார்த்தோமேயானால் கோவூர்க் கிழார், பொய்கையார் என மன்னனை இடித்துரைத்த, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய புலவர்கள் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம், விமர்சனம் | Tagged , , , | Leave a comment

இஸ்லாமிய விளிம்புநிலை வாழ்வின் பிரதிமைகள்

படித்ததில் பிடித்தது.. மீன்குகைவாசிகள் ஆசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை – 24 பக்:192 | ரூ.140 போன்: 044\2372 2939 — எங்கள் ஊரில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். ஊரின் நடுவில் கம்பீரமாக வெண்ணிறச் சுவர்களுடன் எழுந்து நிற்கும் பள்ளிவாசலை என்னவென்று கேட்ட போது என் அப்பா சொன்னார் ‘‘அது முஸ்லீம்களோட … Continue reading

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது | 3 Comments

ஸ்திரீ- பாரதியார்

அது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம் | Tagged , , , , , | 1 Comment

படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் … Continue reading

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , , , | 3 Comments

பாரதி – அவர் மகளின் பார்வையில்

சமீபத்தில் பாரதி – என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாரதியின் இரு புதல்விகளில் … Continue reading

More Galleries | Tagged , | 15 Comments