Category Archives: மலரும் நினைவுகள்

அரும்புமொழி – பிபிசி செய்தி

இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம். கனிக்கு … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எழுதாப் பயணம், கல்வி, சிறப்பியல்புக் குழந்தைகள், மலரும் நினைவுகள் | Tagged , , , , , | 1 Comment

அன்பு மிகவுமுடையான்

கண்ணனைக் குழந்தையாக கண்டு பாடிய பெரியாழ்வார் அவனைத் தன் மாப்பிள்ளையாகக் கொண்டு பாடிய பாடல்களும் உண்டு. அதில் எனக்குப் பிடித்த பாடல் இது. குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன் இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் … Continue reading

Posted in அனுபவம், அப்பா, மலரும் நினைவுகள், Uncategorized | Tagged , , | Leave a comment

கார்த்திகை தீபம்

முன்பெல்லாம் கடைல நெல் பொறி விக்க மாட்டாங்க. எனவே நாமதான் நெல் கொண்டு போகணும். அவங்க அடுப்புல பொறிச்சு மட்டும் கொடுப்பாங்க. எங்கப்பா காலத்துலயே வேலைக்குப் போக ஆரம்பிச்சவங்கல்லாம் முதலில் பூர்வீக நிலங்களை குத்தகைக்கு கொடுத்தாங்க. பிறகு மெல்ல மெல்ல வித்துட ஆரம்பிச்சாங்க. கல்யாணம், காது குத்துன்னு எந்த பெரிய செலவுக்கும் முதல் பலி நிலங்கள்தான். … Continue reading

Posted in அனுபவம், மலரும் நினைவுகள், Uncategorized | Tagged , , | 4 Comments

ஆடிப்பெருக்கு

இன்று ஆடிப் பெருக்கு. மதியம் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கொண்டு வந்திருந்த சித்ரான்னங்கள் (கலந்த சாதங்கள் – தமிழில் வெரைட்டி ரைஸ் 🙂  ) சிறு வயது நினைவுகளை கிளறியது. நினைவு தெரிந்த நாளிலிருந்து வளர்ந்ததெல்லாம் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் இருந்த ஒர் ஊர் என்பதால் நதியோடு சம்பந்தப்பட்ட எல்லா … Continue reading

Posted in அனுபவம், மலரும் நினைவுகள் | Tagged , | 14 Comments