Category Archives: விமர்சனம்

புதிரும் புத்தகமும்

நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

சித்திரம் பேசேல் – புத்தக மதிப்புரை

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்கிறார் வள்ளுவர். அதிகாரம் என்பது கட்டற்றதாக இருந்துவிடக் கூடாது. அது ஒரு போதும் சமூகத்துக்கு நன்மை பயக்காது என்பதுதான் இதன் பொருள். சங்கப் பாடல்களைப் பார்த்தோமேயானால் கோவூர்க் கிழார், பொய்கையார் என மன்னனை இடித்துரைத்த, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய புலவர்கள் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம், விமர்சனம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவன் – இவன் – விமர்சனம்

அவன் இவன் விமர்சனங்கள் பல படித்தேன் .ஒரு முக்கியமான விஷயத்தை யாரும் அதிகம் பேசவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. படத்தில் எல்லோரும் புகழும் ஒரு விஷயம் விஷாலின் அர்பணிப்புணர்வுடன் கூடிய நடிப்பு –பெண் தன்மையோடு பல இடங்களில் பேசுகிறார். இதன் காரணமாக படத்தில் சொல்லப்படுவது என்ன? இயல்பில் அவர் பெண் தன்மை கொண்டவர் என்றா? … Continue reading

Posted in சினிமா, விமர்சனம் | பின்னூட்டமொன்றை இடுக

படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் … Continue reading

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ராவணனும் மணிரத்னமும்..

ராவணன் படம் பார்த்து வந்தோம். கண்ணுக்கு குளிர்வான லொகேஷன்கள், அதைத் தெளிவாக அள்ளி வரும் காமிரா நுணுக்கங்கள் தவிர்த்து படத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே இல்லை. ஐஸ், விக்ரம் ஆகியோரது நடிப்பும் கூட பயனற்றுப் போயிருக்கிறது. ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து அடுத்து ஒரு படைப்பைத் தரும் சுதந்திரம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. அதிலும் … Continue reading

Posted in அனுபவம், சினிமா, விமர்சனம் | Tagged , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

பொம்பளை சிரிச்சா போச்சு…

பிரச்சனையின் அடிமுடி காண எனக்கு நேரமும், சந்தர்ப்பமும் அமையவில்லை. இதை நான் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறேன். எனவே அங்கே கருத்துச் சொன்னாயா, இங்கே மட்டும் சொல்கிறாயே என்பது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்க்கவும். என்னுடைய வருத்தமெல்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும், முதல் பலி சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒழுக்கம், நடத்தை போன்றவையாகவே இருப்பதுதான். அதுவும் ஒரு பெண் … Continue reading

Posted in அனுபவம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை, பதிவர்கள், விமர்சனம் | 14 பின்னூட்டங்கள்

மூடநம்பிக்கைகளும், மொழி பெயர்ப்பு மோசடிகளும்..

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பட்டமளிப்பு விழாவில் அங்கியை கழட்டிப் போட்டுவிட்டு, வீரவசனம் பேசியது பப்ளிசிட்டிக்கான ஸ்டண்ட்தான் என்றாலும் கூட அதிலிருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை. சுதந்திரம் அடைந்து 50 வருடங்களுக்குப் பின்னும் நம்மிடம் நிலைத்து விட்ட எத்தனையோ அர்த்தமற்ற சடங்குகளை பிரிட்டிஷாரின் சொத்தாக இன்னமும் சுமந்தலைகிறோம். * பிரிட்டிஷ் ஆட்சி முறையில் நீதி நிர்வாகத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், விமர்சனம் | Tagged , , , , | 7 பின்னூட்டங்கள்