Category Archives: Uncategorized

எழுதாப் பயணம் நூல் பற்றி கவிஞர் இளம்பிறை

நண்பர்களே, ஒரு நல்ல புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் நம்மை என்ன செய்துவிட முடியுமெனில் , சரியான புரிதலுடன் அன்பானவர்களாக கனிவானவர்களாக மேலும் பொறுப்பானவர்களாக சிறந்த உயரிய மனமாற்றத்தை விளைவிக்கும் என்பதை இன்று நான் வாசித்த நூலொன்று எனக்கு மீண்டும் உணர்த்தியது. ” எழுதாப் பயணம் ‘என்ற லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய (ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

திரும்பிப் பார்க்கிறேன்

இன்றோடு ஆனந்தவல்லி வெளியாகி சரியாக ஒரு வருடம் நிறைவுறுகிறது. இடைப்பட்ட காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நூலறிமுகக் குறிப்புகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நாவல் பரவலாக சென்று சேர்ந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. விற்பனையும் நன்றாக இருப்பதாகவே பதிப்பகத் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். நாவலை எழுதி முடித்த பின்னரும் என் இயல்பான தயக்கத்தோடு போராடிக் கொண்டிருந்தேன். அண்ணன்கள் யூமா வாசுகி, கரு. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

ஆனந்தவல்லி – அஹமது சுபைர்

ஆனந்தவல்லி – a late tributeலக்‌ஷ்மி அண்ணி எழுதிய ஆனந்தவல்லி நாவலைப் படிக்க நேற்றுதான் வாய்த்தது. கையிலெடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமலே முழு நாவலையும் படித்து முடித்தேன். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முத்துக்களை மாலையாகக் கோர்க்க கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.சபாபதியைப் போலான காதல் சாத்தியமா?கொத்தன் போல புத்தி கொண்ட பலர் இந்த மண்ணில் வாழத்தானே செய்கிறார்கள்? … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஆனந்தவல்லி – நாவல் ஒரு பார்வை – அப்துல் பாசித்

ஆனந்தவல்லி – என் பார்வையில் //கரடு முரடான பாதையில் தூரத்தில் வளைவு இருந்தால், வேகமாக ஓடும் குதிரையின் கடிவாளத்தை இருகப்பிடிப்பவன்தான் நல்ல சாரதி.வளைவிற்கு அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்று தெரியாதபோது அறிவுள்ளவன் செய்ய வேண்டியது நிதானிப்பது.// ராபின் ஷர்மாவின் “The Monk who sold his Ferrari” யில் வரும் motivation quotes-களுக்கு இணையானது … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஏக் காவ் மே

பள்ளி நாட்களில் ஒருவர் எங்கள் ஊரில் இந்தி பிரச்சார் சபா தேர்வுகளுக்கான வகுப்பை ஆரம்பித்தார். அவர் தாராசுரத்திலிருந்தோ சுவாமிமலையிலிருந்தோ எங்கள் ஊருக்கு வந்து போனதாக நினைவு. முதலில் சில பையன்கள் சேர்ந்துவிட, அதற்குப் பிறகு விசாரிக்கப் போன எல்லா பெண் குழந்தைகளின் அப்பாக்களும் தயங்கினர். எல்லாம் பசங்களா இருக்காங்க, பொம்பளப் புள்ளைங்கள எப்படி அனுப்பறது என்பதே … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

அந்திமழையின் புது நாவல் வரிசையில் ஆனந்தவல்லி

‘எழுதாப் பயணம்’ என்ற புத்தகத்தின் மூலம் எழுத்துலகிற்குள் நுழைந்த லஷ்மி பாலகிருஷ்ணன், ‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின் வழியாக புனைவு இலக்கியத்திற்குள் களமிறங்கியிருக்கிறார்.பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்துள்ள நாவலின் கதைக்களம் பற்றி அவரிடம் கேட்டோம். “தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுடைய ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடக்கக்கூடிய கதைதான் ஆனந்தவல்லி.பிரிட்டிஷாரின் ஆதிக்கமும், சுதேசி மன்னர்களும் ஒத்திசைந்திருந்த … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஒன்றிய அரசு என்பதே சரி!

அகண்ட பாரதம் என்று சொல்லிக் கொள்ளப்படும் புராண காலத்து பாரத வர்ஷமே ஒரு ஒன்றியம்தான். அதில் 56 தேசங்கள் உண்டு.   புராணங்களில் எந்த அரசன் திக்விஜயம் செய்ய ஆரம்பித்தாலும் அவன் 56 தேசங்களையும் வென்ற பிறகுதான் ஓய முடியும். எந்த இளவரசிக்கு சுயம்வரம் வைத்தாலும் 56 தேசத்து அரசர்களும் வந்து வரிசையில் நின்றார்கள் என்பார்கள்.  நமது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | 1 Comment

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயமோகன்!

மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்குவதும் தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்கவியலா பொன்னொளிர் மைல் கற்கள். வீட்டை விட்டு அதிகம் வெளியில் இறங்காதவர்கள் என தன்னைக் காட்டிக் கொள்ள‘நான் ஆத்தைக் கண்டேனா, அழகரைக் கண்டேனா’ என்றொரு சொலவடையைச் சொல்வார்கள். பாமர மக்களுக்குமே கூட திருவிழா என்றால் சித்திரைத் திருவிழாதான் என்பதை இது போன்ற சொலவடைகள் காட்டும். … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

காற்றில் கரையும் கற்பூர வாழ்கை

மும்பை கொலாபா பகுதியில் நடந்த சம்பவம் இது. தன்வீட்டு வாசலில் அமர்ந்து, அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் தருண். அவனுக்கு வயது பதினாறு. அப்போது அந்த வழியாக மேளதாளங்கள் முழங்கியபடி சென்ற ஒரு ஊர்வலத்தைப் பார்த்ததும் உற்சாகமான தருண்,  தன்னையறியாமல் ஆடியபடியே அந்த ஊர்வலத்தில் ஐக்கியமானான். ஊர்வலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பெண்ணுரிமை போற்றிய அண்ணல் அம்பேத்கர்

பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment