Tag Archives: அனுபவம்

தொடரும் சேவை

பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை எனும் மங்கையை உயிர்ப்பிக்க பாடிய பதிகத்தில் மயிலாப்பூரில் அக்காலத்தில் நிகழ்ந்த விழாக்களைப் பட்டியலிடுகிறார் திருஞானசம்பந்தர். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விழாவாகக் கூறி, அதைக் காணாது போய்விடுவாயோ பூம்பாவை என்று கேட்கும் அந்தப் பத்துப் பாடல்களையும், நூற்பயனாக பாடப் பெற்ற 11வது பாடலையும் பாடியவுடன் பூம்பாவை உயிர்பெற்றாள் என்கிறது மயிலையின் தலபுராணம். … Continue reading

Posted in அனுபவம், சமூகம் | Tagged , | Leave a comment

ஆல் பாஸ்

நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.       கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 1 Comment

மரபு மருத்துவ மீட்பர்களின் கவனத்திற்கு

கொரானா உங்களை அண்டாமல் இருக்க வீட்டு மொட்டை மாடியில் யந்திரம் ஜெபித்து நிறுவித் தருகிறேன் என்கிற விளம்பரம் நமக்கு நகைச்சுவையாகப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு அந்த விளம்பரத்தின் மீதும் கூட நம்பிக்கை வருகிறது – பணத்தைக் கரியாக்குகிறார்கள். அதைப் பற்றி நாம் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் அதேநேரம் நான் சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், சீனாவுக்கே … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம் | Tagged , , , , | Leave a comment

அவசரக் கோலம், அள்ளித் தெளிச்சேன்

ஒரு ராஜா நகர்வலம் போகும் போது ஒரு வீட்டு வாசலில் ரொம்ப அழகான கோலம் ஒன்றை பார்த்தான். ஆஹா, இவ்ளோ அற்புதமான கோலத்தை யார் போட்டதுன்னு கேட்டவனுக்கு ஒரு பாட்டிய கூட்டிட்டு வந்து காமிச்சாங்க. அம்மா, ரொம்ப அற்புதமா கோலம் போட்ருக்கீங்கன்னு ராஜா பாராட்டினான். பாட்டிம்மா சந்தோஷம் மகாராஜான்னாங்க. இளவரசிக்கு கல்யாணத்துக்கு பாத்துட்டிருக்கோம். அவ கல்யாணப் … Continue reading

Posted in அனுபவம், அப்பா, கட்டுரை | Tagged , , | Leave a comment

கனி(ச்) சொல்

ஏதேதோ சாமான்களை இறைத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான் கனி. எந்த வேலையின் போதும் எதையேனும் பாடியபடி இருப்பது அவனது சமீப காலத்துப் பழக்கம். குறையொன்றுமில்லை கண்ணா பாடலுடன் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. ”மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை” என்ற வரியைப் பாடும் போது கருணைக் கடயன்னை என்று பாடினான். … Continue reading

Posted in அனுபவம், குழந்தை வளர்ப்பு | Tagged , | 5 Comments