Tag Archives: இசை

ரார வேணு கோபாலா

கனி கேட்பதை ஒரு சிறு மாற்றமும் இல்லாது அப்படியே திருப்பி பாடுகிறவன். அதுவும் வினாடி சுத்தமாக பிரதியெடுப்பான் என்பதால் எப்போதும் தாளப் பிரச்சனை வந்ததே இல்லை எனலாம். ஆனால் முறையாக பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்த பின்னரும் நெடு நாட்கள் தாளமெதுவும் போடாமலே ஒப்பேற்றிக் கொண்டிருந்தான்.   முதலில் வகுப்புக்கு ஒழுங்காக இருந்தால் போதும் என்றும், … Continue reading

Posted in இசை, கனி இசை | Tagged , , | Leave a comment

இறைவனிடம் கையேந்துங்கள்

கனிக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று நாகூர் ஹனீபா பாடிய இறைவனிடம் கையேந்துங்கள். விரும்பிக் கேட்பான் என்பதால் பாடலை உள்ளூரக் கற்று வைத்திருப்பான் என்று தெரியும். எனவே சில வருடங்களுக்கு முன்பு ஆசிஃபிற்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக வாய்ஸ் மெசேஜாக அனுப்ப எண்ணி பாடச் சொன்னேன். இடையிடையே சிரித்துக் கொண்டே முழுப் பாடலையும் பாடினான். அன்றோ அதற்கடுத்த … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

கருட கமன – 08-செப்-2019

இன்று என்னவோ காலையிலேயே பாடும் மனநிலையில் இருந்தான் கனி. இப்போதெல்லாம் ஒரு பாடலை அவன் ஆரம்பிக்கும் விதத்திலேயே அதை முழுமையாகப் பாடுவானா மாட்டானா என்று என்னால் கணித்துவிட முடிகிறது. இரண்டு வரிகள் சென்றபின்னர்தான் இதை சட்டென காணொளி ஆக்கிப் பார்க்கலாமே என்று தோன்றியது. இதுவரை வந்தே மாதரம் கீ போர்ட் தவிர்த்து பிற எல்லாப் பாடல்களுமே … Continue reading

Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

கஜானனா பஜன் – 2019 விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

வரவர விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் அதீத அலறல் மயமாகி விட்டதால் கடந்த மூன்று நாட்களாகவே கனி கொஞ்சம் மூட் அவுட். எனவே எதுவும் பாட வைக்க முடியவில்லை. ஆடி கழிச்ச அஞ்சாம் நாள் கோழியடித்து கும்பிட்டாளாம் என்று ஊர்பக்கம் சொலவடை ஒன்று உண்டு. அது போல் நேற்று முடிந்த விநாயகர் சதுர்த்திக்கான ஸ்பெஷல் பின்வரும் பஜன். … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

கனி பிறந்த நாள் – 2019

குழந்தை பிறந்த முதல் வருடத்தில் அதன் வயதை மாதங்களில் கணக்கிடுவார்கள். அதைக் கொண்டே வளர்ச்சிப் படிநிலைகளைக்(Developmental Milestones) கணக்கிடுவோம். 3 மாதத்தில் முகம் பார்க்கணும், 6ஆம் மாதம் குப்புரிக்கணும், 8ல் தவழணும், 10ல் நிற்கணும் இப்படியாக அந்த பட்டியல் போகும். பிறகு வருடங்களில் வயதையும், படி நிலைகளையும் கணக்கிடுவோம். 2 வயதில் ப்ளே ஸ்கூல், 3 வயதில் … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , | Leave a comment

வந்தே மாதரம் – கீ போர்ட்

73வது சுதந்திர தின கொண்டாட்டம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மடிப்பாக்கம். கனியின் கீ போர்ட் கச்சேரி அரங்கேற்றம் 😍 https://youtu.be/U-y0SCxEl7k

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?

மீண்டும் அதே  வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள்  அடுத்தவங்களோட நல்ல விஷயம்  எல்லாத்தையும் தங்களோடதுன்னு  சொந்தம் கொண்டாடுவாங்க.  அதுனாலயே பலருக்கு அவங்களைப்  பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா  ஒரு விஷயம் சொல்லேன்  பாப்போம்” “கர்நாடக  சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப்  பிழைகள் உள்ளது. ஒன்று  கன்னடர்களுக்கு தமிழர்களைப்  பிடிக்காததன் காரணம் … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி | Tagged , , , , , , , , | 5 Comments