Tag Archives: கனிவமுதன்

கனி(ச்) சொல்

ஏதேதோ சாமான்களை இறைத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான் கனி. எந்த வேலையின் போதும் எதையேனும் பாடியபடி இருப்பது அவனது சமீப காலத்துப் பழக்கம். குறையொன்றுமில்லை கண்ணா பாடலுடன் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. ”மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை” என்ற வரியைப் பாடும் போது கருணைக் கடயன்னை என்று பாடினான். … Continue reading

Posted in அனுபவம், குழந்தை வளர்ப்பு | Tagged , | 5 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள் – 10, செப் 2012

நேற்று டிவியில் குழந்தைகளுக்கான நாட்டிய போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் பட்ட சில விஷயங்கள் இங்கே. 1. குழந்தைகளின் பெயர்கள் – அக்ஷயா, நிவாஷிகா, தேஜஸ்வினி, ரேஷ்மா. 2. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே வயதுக்குகந்த வளர்ச்சியோடிருந்தாள். இரண்டு பெண்கள் எதிரில் நிற்பவர் ஊதினாலே ஒடிந்து விழுந்து விடுவார்களோ என்று பயப்படும்படி இருந்தார்கள். … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு | Tagged , | 2 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள் 26, ஜூன் 2011

கனிவமுதனை மாலையில் ஒரு சின்ன நடை அழைத்துப் போனேன். தெருவில் இரண்டொரு வீடுகள் தள்ளி ஒரு ஃப்ளாட் உண்டு. அதன் கீழ் தளத்தில் கனியின் வயதொத்த மூன்று குழந்தைகளும் உண்டு. அங்கே போனதும் தோழர்களைப் பார்த்த கனி சத்யாக்ரகம் செய்யவே அங்கே உள்ளே நுழைது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பெரியவர்கள் நாங்கள் ஓரமாய் நின்று … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கல்வி, குழந்தை வளர்ப்பு | Tagged , | 3 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள் 24 டிச, 2010

கனிவமுதனுக்கு சளித் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் டாக்டரிடம் போய் விதவிதமான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தாயிற்று. மருந்து கொடுத்த நான்காம் நாள் குறையும். பின் டோசேஜ் நிறுத்தியவுடன் மீண்டும் ஆரம்பிக்கும்.  ஒன்னேகால் வயதுக்கு அதிகமான ஆண்டி பயாட்டிக்ஸ் கொடுக்கிறோம் என்று தோன்றவே இப்போது கற்பூரவல்லியும், துளசியும் போட்டுக் கஷாயம், ஹிமாலாயாஸின் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010

கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை | Tagged , , , | 7 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள் – 17 அக் 2010

நவராத்திரியில் ஒரு நாள் வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று வலையுலக நட்பு ஒருவர் அழைத்திருந்தார். சரி என்று நானும் பாலாவும் சென்றிருந்தோம். நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள். இனி இது போன்ற சம்ப்ரதாய விழாக்களுக்கு பாலாவுடன் செல்லக் கூடாது என்று முடிவு செய்து கொள்ள நேர்ந்தது அன்று. பின்ன என்னங்க? தோழி வீட்டு மெனு – பிஸிபேளா … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

உதிரிப் பூக்கள் – 4/09/10

ஜேபிஜே நிறுவனத்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்காரர்கள் டிவியில் விளம்பரம் செய்வது நல்ல வழி என்று கண்டு கொண்டுவிட்டார்கள் போலும். அதிலும் விஜய் டிவியில் விளம்பரங்கள் சில வினாடிகள் – நிமிடங்கள் என்று இல்லாமல் மணிக் கணக்கில் வருகிறது. திண்டிவனம் தாண்டி மைலம் போகும் வழியில் ஏதோ ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டியாம். அங்கே இல்லாத வசதி இந்த … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, பதிவர்கள் | Tagged , | 3 பின்னூட்டங்கள்