Tag Archives: கனி அப்டேட்ஸ்

கனி அப்டேட்ஸ் – எங்களுக்கும் கோபம் வரும்

இதுவரை கோபம், வருத்தம், இயலாமை, விருப்பின்மை என எல்லா எதிர்மறை உணர்வுகளுக்கும் அழுகை ஒன்றையே வடிகாலாகப் பயன்படுத்தி வந்தான் கனி. சில வாரங்களாக, குறிப்பாக இந்த லாக்டவுன் காலகட்டத்தில் உணர்வுகளை சற்றே நிறம் பிரித்து அறியத் தொடங்கியிருக்கிறான் என்று தோன்றுகிறது. கோபம் வந்தால் உடனடியாக அழுதுவிட்டாலும், நீண்ட நேரத்திற்கு சம்பந்தப்பட்டவரிடம் பேசாமல் இருப்பது, அவரைக் கண்டு … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், கனி அப்டேட்ஸ் | Tagged , , | 2 Comments

கனி அப்டேட்ஸ் – வாத்தியக் குழு

கனி கடந்த சில வருடங்களாகவே பாவனை விளையாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறான். குறிப்பாக வந்தே குருபரம்பரா கோஷ்டியினரின் பாடல்களை யூட்யூபில் பார்த்துவிட்டு தன்னை அந்தப் பாடகர்களின் இடத்தில் பொருத்திப் பார்த்து பாடிப் பார்ப்பதை ஆரம்பித்தான். அதிலும் ராகுல் தன்னை ஒத்தவன் என்று புரிவதால் அடிக்கடி நெஞ்சில் கை வைத்து, தன்னை ராகுல் வெள்ளல் என்றே சொல்லிக் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – படிச்சவன் பாட்டை கெடுத்த கதை

பெரும்பாலும் கனி ஒரு முறை கேட்டாலே பாடல்களை சரியாகக் கற்றுக் கொண்டு விடுவான். எப்போதாவது சில சமயம் குத்துமதிப்பாக சில வார்த்தைகளைப் புரிந்து கொண்டு பாடுவதும் உண்டு. ஆள் வளர வளர, அவனது மொழியறிவு வளர வளர தன் ஊகத்தால் இது போன்ற தவறுகளை கொஞ்சம் அதிகமாகச் செய்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம். அதனால் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment

பூலோக குமாரி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம். சும்மா சொல்லல சுப்பிரமணி. தமிழ் தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தியின் அன்றைய வடிவமான இந்துஸ்தானி பாஷை என பன்மொழி வித்தகன் அவன். பாரதி எழுதிய இரண்டு சமஸ்கிருதப் பாடல்களில் ஒன்றான பூலோக குமாரி பாடல் இதோ கனியின் குரலில்…

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 42

கனி புதுவிதமான ஒரு பாட்டுக்குப் பாட்டு விளையாட்டை விளையாட விரும்புவான். அதாவது அவன் ஒரு பாட்டின் எந்த இடத்திலிருந்தும் ஏதேனும் ஒரு வரியைச் சொல்வான். உடனே அடுத்த அடியை நாம் சொல்ல வேண்டும். நமக்கு மூன்று வாய்ப்பு தருவான் – அதாவது மூன்று முறை அதே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்வான். பதில் வரவில்லை என்றால் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

அன்னையின் அருள் வேண்டி

உலக அன்னையின் கருணையை வேண்டும் ஒரு பாடல் கனியின் குரலில்

Posted in கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , | Leave a comment

குருவே துணை

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவர் இவ்வுலகில் குருவன்றி வேறு யார்? குருவருளின் பெருமை பேசும் பாடல் ஒன்று கனியின் குரலில்

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

பாற்கடல் வாசனைப் பாடிடுவோம்

மேலும்  ஒரு பஜனைப் பாடல் கனியின் குரலில்

Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

பாண்டுரங்க விட்டலனை பாடிடுவோம்

பொதுவாக பஜனைப் பாடல்களில் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று நாமாவளிகளே அதிகம் இருக்கும். அதற்கான பெரிய சொற்களஞ்சியம் ஒன்று எல்லா மொழிகளிலும் உண்டு. கோபாலா என்று வருமிடத்தில் கோவிந்தா என்றாலும் சிக்கலிருக்காது. எனவே ஆற்றொழுக்கு போல எல்லோருமே பாடிவிட முடியும். ஆனால் விதிவிலக்காக சில பஜனைப் பாடல்களிளோ வரிகளை லாவகமாகப் பாட வேண்டியிருக்கும். அப்படியானதொரு பாடல் … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

சங்கீதமே சன்னிதி

கனிக்கு வந்தே குரு பரம்பரா தொடரில் வரும் எல்லாப் பாடல்களும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக சூர்ய காயத்ரியின் பாடல்களின் தீவிர ரசிகன் அவன். ராகுலின் பாடல்கள் தனக்கு சரியாகப் பொருந்தும் என்று அவனாகவே முடிவு செய்து கொண்டு அப்பாடல்களை பிரதியெடுக்க முயற்சிப்பதும் உண்டு. அவர்கள் இருவருமே சென்னைக்கு கச்சேரிக்கு வருகிறார்கள் என்றதும் நிச்சயம் இவனை அழைத்துப் … Continue reading

Posted in ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், சின்னச் சின்ன ஆசை | Tagged , , | Leave a comment