Tag Archives: கவிதை

தேடல்

இந்த முறை ஊருக்கு போகும் போது அவசியம் தேட வேண்டும் விடுமுறைக்கு முந்தைய நாளின் பின்மதியப் பொழுதொன்றில் முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில், நெடுஞ்சாலையின் ஒரத்திலிருக்கும் பாழடைந்த கிணற்று மேடையில், ஊருக்கு வெளியிலிருக்கும் முந்திரித்தோப்பில், கல்லூரிக்கு எதிரிலிருக்கும் உடையார் கடையில், இன்னும் நினைவடுக்கில் தட்டுப்படும் எல்லா இடங்களிலும். எங்கேனும் ஒரு இடத்திலாவது இல்லாமலா போய்விடும் … Continue reading

Posted in கவிதை | Tagged | 14 பின்னூட்டங்கள்

ஏமாற்றம்

கைநிறைய நீரள்ளி வைத்து அதில் நிலவை பார்த்து ரசித்திருக்கும் சிறு குழந்தையென வாழ்ந்து வந்தேன் விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல். நிலவை காணோமென்று காலுதைத்து அழும் குழந்தை போலானேன் இன்று.

Posted in கவிதை | Tagged | 18 பின்னூட்டங்கள்

முற்றுப்புள்ளி

வாரந்தோறும் வந்து போகும் வெள்ளி மாலை குதூகலமும் திங்கள் காலை சிடுசிடுப்பும் போல நம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின் பிரக்ஞையில் பதிந்து போயாகிவிட்டது. பிரியப்போகிறோமென்றோ இணைந்துவிட்டோமென்றோ நண்பர்களிடை சொல்கையில் அவர்களின் இதழோரத்தில் நெளியும் குறுநகையில் தெரிக்கும் ஏளனம் என்னுள் இறக்கும் ஊசிகளின் வலியறிவாயா நீ? இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் … Continue reading

Posted in கவிதை | Tagged | 8 பின்னூட்டங்கள்

நம்பிக்கை – 2

தொண்டையை வறளச்செய்யும் இந்த தாகம் பயமுறுத்தினாலும் தூரத்தில் தெரியும் நீர்பரப்பு கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய் உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும். தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும் என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள். இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.

Posted in கல்வி | Tagged | 9 பின்னூட்டங்கள்

நம்பிக்கை

எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு போர்வைக்குள் புதைந்துகொண்டு கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல் இன்னமும் நம்புகிறேன் நீ மீண்டும் வருவாயென.

Posted in கவிதை | Tagged | 13 பின்னூட்டங்கள்

கையெட்டும் தூரம்

உதிரத்தொடங்கிவிட்ட சுவற்றுச்சுண்ணாம்பு காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய் மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள். பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல் இறங்கியே வருகிறது என் மனவுறுதி. உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில் நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன. நம்மிருவருக்கும் இப்போது அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.

Posted in கவிதை | Tagged | 10 பின்னூட்டங்கள்

அடுத்தது?

பனிப்புகை மூடிய பாதை போல, மறைந்த எழுத்தாளர் பாதியில் நிறுத்திப்போன தொடர்கதை போல, வாழ்வின் எல்லா திசைகளிலும் மறைக்கும் திரைகள் தொங்குகின்றன. காற்று அசைவற்று நிற்கையில் சலனமற்றிருக்கும் பாய்மரக்கப்பலொன்றின் பயணி போல்திசையறியாது திணறுகிறேன். அடுத்த நொடி பற்றிய யூகங்களும் பயங்களுமாய் கழிகிறதென் வாழ்வு.

Posted in கவிதை | Tagged | 4 பின்னூட்டங்கள்