Tag Archives: குழந்தை வளர்ப்பு

கனி அப்டேட்ஸ் – 42

கனி புதுவிதமான ஒரு பாட்டுக்குப் பாட்டு விளையாட்டை விளையாட விரும்புவான். அதாவது அவன் ஒரு பாட்டின் எந்த இடத்திலிருந்தும் ஏதேனும் ஒரு வரியைச் சொல்வான். உடனே அடுத்த அடியை நாம் சொல்ல வேண்டும். நமக்கு மூன்று வாய்ப்பு தருவான் – அதாவது மூன்று முறை அதே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்வான். பதில் வரவில்லை என்றால் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

வெயிலின் கவிதைகளைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார் – “நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச்சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத்தெரியவேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்கவேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது.” இதுவே உண்மை … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், சமூகம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் | Tagged , , , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 41

கனியோடு செல்வதென்றால் பொதுப் போக்குவரத்துகளில்  ரயில் பயணம் மட்டுமே முன்பெல்லாம் என் தேர்வாக இருந்தது. சமீப காலமாக பேருந்திலும் அவனை ஏற்றி இறக்க ஆரம்பித்திருக்கிறேன். அதில் ஏற்படும் ஆரம்பகட்ட அல்லல்கள் கொஞ்சநஞ்சமல்ல. வேகமாக வாசிப்பவன் என்பதால் பேருந்தின் படிக்கட்டில் பின்புறம் ’ஏறும் வழி’என்றும், முன்புறம் ’இறங்கும் வழி’ என்றும் எழுதப்பட்டிருப்பதை ஆரம்பத்திலேயே படித்துவிட்டான். பொதுவாகவே ஆட்டிச … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 40

முன்பெல்லாம் கனி ஏதேனும் தவறு செய்துவிட்டால் நாம் அதைப் பற்றி ஏதும் பேசுவதற்கு முன்னரே ஃபினிஷ்டு என்பான். அதன்பிறகு அப்படி சொல்வது என் கோபத்தை அதிகரிக்கிறது என்று புரிந்து கொண்டவனாக சாரி அம்மா என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் சாரி சொல்லி முடிக்கும் முன்னரே நாம் ‘இட்ஸ் ஒகே’ என்று சொல்லி அதை ஏற்றுக் கொண்டாக … Continue reading

Posted in ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 39

ஒரு படத்தில் செந்தில் எதோ சொல்லிவிட கவுண்டர் இதை அப்படியே போய் தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சுட்டு, பக்கத்துலயே நீயும் உக்காந்துக்க ராசான்னுவார் நக்கலா. விடுமுறை நாளின் வழக்கமான ஆசாரப்படி காலையில் எழுந்ததுமே கனி எங்க போறோம்னு ஆரம்பித்தான். மழை இல்லாம இருந்தா மைலாப்பூர் போறோம்னு ரொம்ப கவனமா பதில் சொன்னேன். உடனே அதை நானோ/அவனோ … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 38

Aug, 2019 குடும்பமாக பயணிக்கும் பொழுதுகளில் யாராவது ஒரு பெரியவர் மொத்தப் பொதிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதை பார்த்திருப்போம். பை, பெட்டி, தட்டுமுட்டு சாமான்களோடு குட்டிக் குழந்தைகளையும் சேர்த்தே கணக்கில் வைத்திருந்து, ஒவ்வொரு இடத்திலும் ஏறும்போதும், இறங்கும்போதும் எண்ணிக் கொண்டே இருக்கும் உறவுக்காரர்கள் எல்லாருக்கும் வாய்த்திருப்பார்கள். கடந்த சிலவருடங்களாகவே எங்கள் வீட்டில் அந்தப் பொறுப்பை கனி ஏற்றுக் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 37

2019, Aug ஒரு நாளை என்ன செய்வது என்பது கனிக்கு தினமும் எழும் பெரிய வினா. ஏதேனும் ஒரு விஷயத்திற்குள் மூழ்குவது, ஒரே மாதிரியான நிகழ்வுகளின் அட்டவணைகளை தினந்தோறும் கடைபிடிப்பது போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கனிக்கு பயணங்களும் முக்கியம். ஒவ்வொரு நாளும் கொஞ்ச தூரமாவது பயணித்தே ஆக வேண்டும் அவனுக்கு. மழை நாட்கள் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment