Tag Archives: சமூகம்

அரும்புமொழி – பிபிசி செய்தி

இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம். கனிக்கு … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எழுதாப் பயணம், கல்வி, சிறப்பியல்புக் குழந்தைகள், மலரும் நினைவுகள் | Tagged , , , , , | 1 Comment

ஏக் காவ் மே

பள்ளி நாட்களில் ஒருவர் எங்கள் ஊரில் இந்தி பிரச்சார் சபா தேர்வுகளுக்கான வகுப்பை ஆரம்பித்தார். அவர் தாராசுரத்திலிருந்தோ சுவாமிமலையிலிருந்தோ எங்கள் ஊருக்கு வந்து போனதாக நினைவு. முதலில் சில பையன்கள் சேர்ந்துவிட, அதற்குப் பிறகு விசாரிக்கப் போன எல்லா பெண் குழந்தைகளின் அப்பாக்களும் தயங்கினர். எல்லாம் பசங்களா இருக்காங்க, பொம்பளப் புள்ளைங்கள எப்படி அனுப்பறது என்பதே … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

ஒன்றிய அரசு என்பதே சரி!

அகண்ட பாரதம் என்று சொல்லிக் கொள்ளப்படும் புராண காலத்து பாரத வர்ஷமே ஒரு ஒன்றியம்தான். அதில் 56 தேசங்கள் உண்டு.   புராணங்களில் எந்த அரசன் திக்விஜயம் செய்ய ஆரம்பித்தாலும் அவன் 56 தேசங்களையும் வென்ற பிறகுதான் ஓய முடியும். எந்த இளவரசிக்கு சுயம்வரம் வைத்தாலும் 56 தேசத்து அரசர்களும் வந்து வரிசையில் நின்றார்கள் என்பார்கள்.  நமது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | 1 Comment

பெண்ணுரிமை போற்றிய அண்ணல் அம்பேத்கர்

பழைய கதைகள், படங்களில் எல்லாம் மைனர் என்கிற பொதுப்பெயரில் சில கதாபாத்திரங்கள் உலவுவதை படித்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். அந்த மைனர்கள் எல்லோருமே மது, மாது ,சூது என சகலவித கெட்ட பழக்கங்களுக்கும் புகலிடமாக மோசமான நடத்தை உள்ளவர்களாக உலாவுவார்கள். உண்மையில் மைனர் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது பொருள். அந்த வார்த்தை எங்கனம் துர்நடத்தைகளோடு … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்

மனநலம் என்றால் என்ன? ஒரு மனிதன் தன் உணர்வுகளை சரியாகக் கையாள்வதும், சராசரியான அறிவாற்றலுடன் இருப்பதுமே அம்மனிதனின் மனநலத்துக்கான அடிப்படையான அளவு கோல்கள். வாழ்வை மகிழ்வோடு எதிர்கொள்வது, வாழ்வின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இடையே சமநிலையைப் பேணுவது, உடல் நலம் பேணுவது போன்றவையெல்லாம் ஒருவர் சரியான மனநலத்துடன் வாழ்வதன் அறிகுறிகள். உலக மனநல கூட்டமைப்பு(World Federation for … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

’என் சரித்திரம்’ நூலில் உ வே சா தன் குருநாதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நெகிழ்வுடனும், மட்டற்ற மரியாதையோடுமே விவரிப்பதைக் காணலாம். அவரிடம் தமிழ் கற்கச் சேர்ந்த சில நாட்களிலேயே ”உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா” என்று கேட்கிறார். “வீட்டில் என்னை சாமா என்று அழைப்பார்கள். சாமிநாதன் என்ற பெயரின் … Continue reading

Posted on by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் | 2 Comments

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்பது நாகரீகப் போர்வைக்குள் நம் உள்ளுறையும் சுயநலத்தின் வெளிப்பாடு. பசு பால் தரும், நாய் காவல் காக்கும் என்று ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்திலேயே படித்து வளர்ந்த நாம் கொள்ளும் விலங்கு நேசத்திற்கும் பழங்குடியினரின் இயற்கை மீதான ஆன்மீகம் கலந்த அன்பிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தொலைவு … Continue reading

Posted on by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் | 1 Comment

தொடரும் சேவை

பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை எனும் மங்கையை உயிர்ப்பிக்க பாடிய பதிகத்தில் மயிலாப்பூரில் அக்காலத்தில் நிகழ்ந்த விழாக்களைப் பட்டியலிடுகிறார் திருஞானசம்பந்தர். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விழாவாகக் கூறி, அதைக் காணாது போய்விடுவாயோ பூம்பாவை என்று கேட்கும் அந்தப் பத்துப் பாடல்களையும், நூற்பயனாக பாடப் பெற்ற 11வது பாடலையும் பாடியவுடன் பூம்பாவை உயிர்பெற்றாள் என்கிறது மயிலையின் தலபுராணம். … Continue reading

Posted in அனுபவம், சமூகம் | Tagged , | Leave a comment

புத்தியுள்ள மனிதரெல்லாம்

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இவ்வரி பொதுவாக நல்லூழ், இறை ஆசி போன்றவற்றைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் மாணவப் பருவத்தில் இவ்வாறு நிகழ்வதற்கான முக்கியமான காரணியாக இருப்பது கற்றல் குறைபாடு. கல்வியில் பின் தங்கியிருக்கும் அனைத்துக் குழந்தைகளும் கற்றல் குறைபாடு உடையவர்கள் அல்ல. நிஜமாகவே நுண்ணறிவுத் திறன்(IQ) குறைவால் கல்வி கற்பதில் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கற்றல் குறைபாடு, குழந்தை வளர்ப்பு, செல்லமே, டிஸ்லெக்சியா | Tagged , , , , , | 3 Comments

ஆல் பாஸ்

நேற்றிலிருந்து பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பான பதிவுகளை கவனித்ததில் ஒரு விஷயம் புரிபட்டது. 90% மனிதர்கள் அப்பாடா என்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகையில் 10% பேர் விதவிதமாக வயற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.       கொரோனா புண்ணியத்தில் பாசானவர்கள் என்று சர்டிஃபிகேட்டில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தச் சொல்வது முதல் ஸ்டேட் ஃபர்ஸ்ட் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , , , , | 1 Comment