Tag Archives: நூல் விமர்சனம்

புதிரும் புத்தகமும்

நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் … Continue reading

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

படித்ததில் பிடித்தது (9)

புத்தகம்: சதுரங்கக் குதிரைஆசிரியர்: நாஞ்சில் நாடன்பதிப்பகம்: விஜயாநம் சமூக அமைப்பில் திருமணம் என்கிற அமைப்பு ஒரு அசைக்க முடியாத அங்கம். திருமணமில்லா வாழ்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே அபூர்வமாக நடக்கும் விஷயம். காரணம் கண்முண் வாழ்ந்த அனைவரும் சென்று பழகிய பாதை. பாதுகாப்பானது. அதிக ரிஸ்க் இல்லாத சௌகர்யமான வழி. அதே போல் திருமணம் வேண்டாம் … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 8 பின்னூட்டங்கள்

படித்ததில் பிடித்தது (8)

புத்தகம் – மூன்று விரல்ஆசிரியர் – இரா. முருகன்பதிப்பகம் – கிழக்குப் பதிப்பகம்முதல் பதிப்பு – ஆகஸ்ட், 2005 பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்கதம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலானாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்புகள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 13 பின்னூட்டங்கள்

படித்ததில் பிடித்தது (7)

புத்தகம் – திரைகளுக்கு அப்பால்ஆசிரியர் – இந்திரா பார்த்தசாரதிமுதல் பதிப்பு – 1974சமீபத்திய பதிப்பு – ஜூலை, 2006.பதிப்பகம் – கிழக்கு இந்த நாவல் 1971ல் தினமணிக் கதிரில் தொடராக வந்து, பின் பாதியில் நிறுத்தப்பட்டது – காரணம் நம் கலாச்சாரக் காவலர்களின் கைங்கர்யம்தான். வழக்கமான இ.பாவின் அறிவுஜீவித்தனம் ததும்பும் பாத்திரங்கள் நிறைந்த இக்கதையில் அவர்களின் … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

படித்ததில் பிடித்தது (6)

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய கதை. எனவே என் வழக்கப்படி முழுக் கதையையும் இங்கே தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே சில பகுதிகளை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 30 பின்னூட்டங்கள்

படித்ததில் பிடித்தது (5)

புத்தகம் – சிறகுகள் முறியும்ஆசிரியர் – அம்பை (சி.எஸ். லக்ஷ்மி)முதல் பதிப்பு – 1976சமீபத்திய பதிப்பு – டிசம்பர், 2003பதிப்பகம் – காலச்சுவடு ஆசிரியரைப் பற்றி:வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடீஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் கன்னடமும் அறிந்தவர். The Economic and Political Weekly, The Times of … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்