Tag Archives: பெண்கள்

அமிர்தம்

பானுமதி அருமையான பாடகி, தேர்ந்த நடிகை, இயக்குனர் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். ஆனால் அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அதுவும் சாகித்திய அகாடமி விருது வென்ற நாவலுக்கு சொந்தக்காரர் என்றறிந்த போது வியப்பாக இருந்தது. தேடிப் பிடித்து அவரது விருது பெற்ற நாவலைப் படித்தபோது நொந்து போனேன். சிறந்த கலைஞர்களுக்கு, அவர்களின் மோசமான கலைப்படைப்பை முன்வைத்து பரிசளித்து கௌரவிப்பது … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், தி. ஜானகிராமன், பெண்ணியம் | Tagged , , , , , | Leave a comment

முன்னுதாரணம்

மகாபாரதத்தில் ஒரு இடம். குக்ஷேத்திர யுத்தத்தில் கௌரவர்களின் சேனாதிபதியாக முதலில் பதவியேற்பவர் பீஷ்மர். அவரது தலைமையில் யுத்தம் நடந்தபோதுதான் அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற அதர்மங்கள் நடந்தன. அதன்பின் துரோணரும், அவருக்குப் பின் கிருபரும் சொற்பநாட்களுக்கு கௌரவ சேனாதிபதியானார்கள். அவர்களின் தலைமையின் கீழும் சில விதிமீறல்கள் நடக்கவே செய்தன. பாண்டவர்தரப்பில் 18 நாளுமேஅதர்மயுத்தம்தான். அதே சமயம் கிருபருக்குப் … Continue reading

Posted in அரசியல், எண்ணம், சமூகம் | Tagged , , | 1 Comment

ஸ்திரீ- பாரதியார்

அது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம் | Tagged , , , , , | 1 Comment

இல்லத்தரசர்கள் ஏன் உருவாவதில்லை?

எழுத்தோ இசையோ சிற்பமோ கலை எதுவாயினும் கலைஞன் என்பவன் ஒரு விசேஷமான பிறவிதான். எந்தக் கலையும் மறையாத நுண்ணுர்வையும், தீராத படைப்பூக்கத்தையும் கோருவது. ஒரு மனிதன் கலையை ரசிக்கவே நுண்ணுர்வோடும், ரசனையோடும் அதற்கென தனிப்பட நேரம் செலவிடத் தயாராகவும் வேண்டுமென்றால் கலைஞன் அக்கலைப் படைப்புகளை படைக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? அப்படி தன் உணர்வுகளையும், … Continue reading

Posted in இலக்கியம், எண்ணம், கட்டுரை, சமூகம் | Tagged , , , , | 3 Comments

உதிரிப் பூக்கள் – 22 டிசம்பர், 2010

அரிச்சந்திர நாடகம் பார்த்துதான் காந்தி சத்தியசீலர் ஆனார் என்று சொல்வது நிஜம்தான் போலிருக்கிறது.  காதலனும் காதலியும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென பத்து வெள்ளைக் கார ஆண்களும் பெண்களும் பின்னணியில் குத்தாட்டம் போடுவது மாதிரியான மரண மொக்கைப் படங்களை பார்த்துக் கூட நம் மக்கள் திருந்துகிறார்களாம்… நானொரு எம்.சி.பியாக்கும் என்று பெருமிதத்துடன் சொல்லித் திரிந்த, … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள் | Tagged , , , , , , , | 4 Comments

புரிதல்!

(சிறுகதை) கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே, ஒவ்வொரு முறை அந்த வார்த்தை களைக் கேட்கும் போதும், மிளகாயை அரைத்துப் பூசினாற் போலத் தான் பானுவுக்கு எரிகிறது; இன்றும் எரிந்தது. ஏழரை மணிக்கு அலுவலக பஸ்சை பிடிப்பதற்கு முன்னரே காலைச் சிற்றுண்டி, … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | 10 Comments

உதிரிப்பூக்கள் – 13-ஜுலை-2010

நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அஞ்சறைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த குறிப்பிட்ட எபிசோட் ஸ்ரீரங்கத்தில் எடுக்கப் பட்டிருந்தது. தொகுப்பாளர் ஊரின் சிறப்புகளைச் சொல்வதற்காக கையில் மைக்குடன் தெருவில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார். “சித்திரை வீதியில் நான்கு, உத்திர வீதியில் நான்கு என மொத்தம் எட்டு தெருக்கள் இருக்கு. இதையெல்லாம் சேர்த்து … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், சமூகம், மூட நம்பிக்கை | Tagged , , , | 13 Comments

தூசி படியவா புத்தகங்கள்…

சுஜாதாவின் எழுத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நடையை குறிப்பாக சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை வியக்காமல் இருக்க முடிவதில்லை. இன்று காலையில் அவரது சில சிறுகதைகள் நினைவுக்கு வந்தன – அத்தோடு அவை தொடர்பான சில சிந்தனைகளும் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. முதல் சிறுகதையில் ஒரு கணவன் அலுவலகப் பணத்தை … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை | Tagged , , , , , , | 10 Comments

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம். மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் … Continue reading

Posted in அனுபவம், எண்ணம், கல்வி, சமூகம், பதிவர்கள், விமர்சனம் | Tagged , , , | Leave a comment