நம்பிக்கை


எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கவிதை and tagged . Bookmark the permalink.

13 Responses to நம்பிக்கை

 1. முத்துலெட்சுமி/muthuletchumi says:

  நல்லாருக்கு.

 2. லக்ஷ்மி says:

  வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க முத்துலெட்சுமி.

 3. அருட்பெருங்கோ says:

  ம்ம்ம்… கனவு தொடர வாழ்த்துக்கள்!!! 😉

 4. Deva Udeepta says:

  ஒரு பதில் கவிதை…ஒவ்வொரு முறையும் உன் நிதர்சனத்தின் முன் தோற்றுப்போய்திரும்பும்போதும்,மீண்டும் மீண்டும் உன்னிடமே வந்துநிற்கிறேன் பழைய முகத்தின்மேல் புதிய முகப்பூச்சுடன் வரும் வயதான நடிகன்போல,என் தேடல்கள் ஒவ்வொருமுறையும் உன்னுடனே முடிவடைவதில் மகிழ்ச்சியே!

 5. லக்ஷ்மி says:

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அருட்பெருங்கோ அவர்களே.

 6. லக்ஷ்மி says:

  தேவ உதிப்தா, முகப்பூச்சுகளின் அடர்த்தியால்தான் தோல்வியே தொடர்கிறதோ என்னவோ. எல்லாவற்றையும் அழித்து விட்டு உண்மை முகத்துடன் ஒரு முறை முயன்று பாருங்களேன். தவிரவும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் முடியுமெனில் தேடல்களின் பயன் தான் என்ன? உங்களின் தேடலின் அளவுகோல்களை மறுபரிசீலனை செய்து பாருங்களேன்.

 7. Deva Udeepta says:

  என் கவிதையை கேவலப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

 8. Madura says:

  லஷ்மி உங்களுடைய இரண்டு கவிதைகளையும் மிகவும் ரசித்து படித்தேன். பழைய கவிதைகள் என்று முந்தைய பதிவில் பார்த்தேன். அழகாய் இருக்கின்றன உங்கள் நேர்மை மிளிரும் கவித்துவம். இப்பவும் எழுதுங்க ப்ளீஸ். கவிதை படிக்கிற அளவு நான் இலக்கியவாதி இல்ல. ஆனா எனக்கு நிஜமாவே படிச்ச உடனே உங்க கவிதைகள் இரண்டும் பிடிச்சிருந்தது. மேலும் பல எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 9. லக்ஷ்மி says:

  நன்றி மதுரா. இப்போதும் நான் எழுதுவது உண்டுதான். ஆனால் இடைவெளிதான் கொஞ்சம் அதிகம்.இதுவரை கடந்த 10 வருடங்களில் மொத்தமாய் ஒரு 15 எழுதியிருப்பேன். எனது நண்பர் வட்டத்தில் ஏதோ எப்பவாவதுதானே இந்த அசம்பாவிதம் நடக்குதுன்னுதான் பொறுத்து போறாங்கன்னு நினைக்கறேன். 🙂 அப்பொப்பொ இப்படி பாராட்டுக்களை கேட்கறப்போ அடடா, நம்மையும் பொறுத்து படிக்க இன்னொரு ஆள் கிடைச்சாச்சுன்னு சந்தோஷமா இருக்குங்க. தேவ உதிப்தா, எதற்காக இந்த கோபம் என்று எனக்கு புரியவில்லை. உண்மையிலேயே என் பதில் எந்த விதத்திலாவது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். இனி உங்களுக்கு நன்றி தவிர வேறெதுவும் நிச்சயம் சொல்லப்போவதில்லை. மேலும் அந்த பதிலையும் வேண்டுமானாலும் சொல்லுங்கள், நீக்கி விடுகிறேன்.

 10. பத்மா அர்விந்த் says:

  மிகவும் பிடித்திருக்கிறது, கொஞ்சம் உண்மையாய், நேர்மையாய் அழகாய் இருக்கிறது.

 11. லக்ஷ்மி says:

  நன்றி பத்மா.

 12. Gopalan Ramasubbu says:

  நல்ல கவிதை 🙂

 13. லக்ஷ்மி says:

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபாலன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s