பிரச்சனையின் அடிமுடி காண எனக்கு நேரமும், சந்தர்ப்பமும் அமையவில்லை. இதை நான் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறேன். எனவே அங்கே கருத்துச் சொன்னாயா, இங்கே மட்டும் சொல்கிறாயே என்பது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்க்கவும்.
என்னுடைய வருத்தமெல்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும், முதல் பலி சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒழுக்கம், நடத்தை போன்றவையாகவே இருப்பதுதான்.
அதுவும் ஒரு பெண் பதிவரை சக பதிவர் ஒருவர் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சம்பந்தமில்லாமல் சொல்லப் போனதுக்கே டென்ஷன் ஆன நர்சிம் போன்ற ஒருவரிடமிருந்து இப்படியான கீழ்த்தரமான ஒரு செய்கையை நிச்சயம் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஒரு பெண்மணி உங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார், சரி – பதிலுக்கு நீங்களும் அப்படியே செய்துவிட்டுப் போங்களேன். அதற்கு பதிலாக வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் தரத்தில் அவரைப் பற்றிப் பேசுவதும், கேரக்டர் அசாசினேஷன் செய்வதும்தானா பண்பான செய்கை?
இதில் சம்பந்தமே இல்லாமல் இன்னொருவர் உள்நுழைந்து பெண் பதிவர்கள் நர்சிம் குழுவினரை திட்டுவதெல்லாம் பதிவர் சங்கம் பற்றிய பிரச்சனையினால்தான் என்று கண்டுபிடித்து அறிவிக்கிறார். பதிவர் சங்கம் வரலாம், கூடாது என்பது பற்றி இதுவரை ஆயிரத்தி சொச்சம் பதிவுகள் வந்தாகி விட்டது. அதிலெல்லாம் வன்மம் இல்லையாம் – ஏனெனில் அதையெல்லாம் எழுதியது சக ஆண்பதிவர்கள். அதற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாமல் நக்கலடித்துப் போடப்பட்ட ஒரு பதிவு சங்கத்துக்கு எதிராக வன்மம் கக்குகிறதாம். என்ன கண்டுபிடிப்புடா சாமி?
இதன் மூலம் சொல்லப்படும் நீதி யாதெனின், எந்த விஷயமாக இருந்தாலும் பெண்கள் கருத்து சொல்லக் கிளம்பக் கூடாது. அப்படிக் கிளம்பினால் போச்சு, சேலைய உருவிடுவோம் (நிஜத்திலோ அல்லது எழுத்திலோ – எதில் வாய்ப்புக் கிடைக்கிறதோ அதில் உருவுவோம்) என்பதுதான் இந்த செயல்களில் உள்ளர்த்தம்.
நர்சிம்மின் பதிவிலும், மாதவராஜின் பதிவிலும் பின்னூட்டங்களில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்தியிருக்கும் நர்சிம் பாதுகாப்பு பேரவை வீரர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவைதான்.
1. சந்தனமுல்லையும், மற்ற சில பெண் பதிவர்களும் தொடர்ந்து நர்சிம்மையும் அவரது குழுவினரையும் தொடர்ந்து சீண்டி வந்தனர். (இதில் சீண்டுதல் என்றால் அவரது தனிப்பட்ட கேரக்டரை கேவலப்படுத்துவதில்லை – புத்தகம் போடுதல், சக பதிவர்களுடன் புரிந்துணர்வுடன் பின்னூட்டமிட்டு ஊக்க்ப்படுத்திக் கொள்வது- அதாவது கும்மியடித்துக் கொள்வது போன்றவற்றை நக்கலுடன் பட்டியலிட்டு, அவரை மட்டம் தட்டிக் கொண்டிருப்பது)
2. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தாங்க முடியாமல்தான் நர்சிம் இப்படி ஒரு பதிவு எழுத வேண்டிப் போனது (எப்படியாப்பட்ட பதிவு என்றால் தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சிலான தனி நபர் தாக்குதல் – கேரக்டர் அசாசினேஷன் செய்தல் – இதற்கு சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை)
3. குட்டக் குட்ட குனிஞ்சுகிட்டே இருக்க முடியுமா? கோபத்துல கைல கிடைக்கறத எடுத்து அடிக்க மாட்டோமா? அது மாதிரித்தான் இதுவும் (எது, ஒரு பெண்ணை அவுசாரின்னு சொல்றது, அவ அம்மாவையும் கேவலப் படுத்த அவ பொறப்பு அப்படின்னு சொல்றது, அவ குழந்தைய பயமுறுத்தறா மாதிரி பேசறது இதெல்லாம் எதோ கொஞ்சம் கோபப்பட்டதோட விளைவு. அப்ப அய்யாமாருங்க உண்மையிலேயே ரொம்ப கோபப்பட்டா பதிவெழுதிகிட்டிருக்கும் பெண்களின் நிலைய நினைச்சாலே குலை நடுங்குதுங்கோ)
4. இந்த புனைவை கண்டிப்பவர்கள் யாரும் ஏன் முதலில் போடப்பட்ட அந்த பகடி பதிவுகளை கண்டிக்கவில்லை? இதற்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு உதாரணம் – கொலை செய்தவனை மட்டுமே குற்றம் சொல்கிறீர்களே, ஏன் கொலை செய்யத் தூண்டிய சதிகாரர்களை குற்றம் சொல்லவில்லை? ஆனால் இதற்கு சரியான உதாரணம் என்ன தெரியுமா? மகாபாரதத்தில் தான் தடுக்கி விழுந்ததை பார்த்து சிரித்த திரௌபதியை துகிலுரிந்த துரியோதனனின் செய்கைதான் இதற்கு பொருத்தமான உதாரணம். முதலில் திரௌபதி சிரித்ததுதான் தவறு என்று கண்டித்துவிட்டுத்தான் துரியோதனின் செய்கையை கண்டிக்க வேண்டும் போல. நல்ல நியாயம்டா சாமி.
எனக்கு ஒன்றுதான் புரியவில்லை – ஏன் எப்போது எல்லாப் பிரச்சனைக்கும் பெண்ணின் நடத்தையே சந்தியில் இழுக்கப் படுகிறது? சந்தனமுல்லை அரசியல் செய்ததாகவே இருக்கட்டும், விஜி பகடி என்ற பெயரில் உங்களை புண் செய்ததாகவே இருக்கட்டும். அவற்றுக்கெல்லாம் பதில் என்ன? அதே போன்ற, ஏன் அதை விடவும் உள்குத்துகள் நிறைந்த பதில்கள் மட்டும்தானே? இல்லை அப்படியெல்லாம் எழுதத் தெரியாதவர்களா நீங்கள் எல்லாம்? இதே போன்ற பகடிகள் இதற்கு முன்னரும் பின்னரும் பிற ஆண் பதிவர்களால் மற்றவர்களை குறி வைத்து எழுதப்பட்ட போதெல்லாம் அப்படிப்பட்ட எதிர்வினைகளை மட்டும்தானே இந்த வலையுலகம் கண்டிருக்கிறது/ காணப்போகிறது? ஆனால் அதே போன்ற பகடி/உள்குத்து பதிவுகள் அல்லது சீண்டும் பின்னூட்டங்கள் ஒரு பெண்ணிடமிருந்து வந்தால் மட்டும் ஏன் இப்படியான புனைவுகள் பொங்கி வருகின்றன? யார் உங்களுக்கு அந்தப் பெண்ணின் நடத்தையை கேவலப்படுத்தும், அதை ஆதரிக்கும் உரிமையை உங்களுக்கு தந்தது? என்னுடைய கேள்வி இது மட்டுமே.
இந்த கருத்துக்களை அவரது பதிவிலேயே பின்னூட்டத்திலிடலாம் என்றுதான் உள்ளே போனேன். அதற்குள் பின்னூட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. எனவே இங்கே தனிப்பதிவாக இடுகிறேன். அந்த பதிவிலேயே தன் கருத்துக்களை தெளிவாக எடுத்து வைத்திருந்த கவிஞர் ராஜசுந்தர்ராஜன் அவர்களுக்கும், தங்களது எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்த நண்பர்கள் பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார் போன்றவர்களுக்கும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வலையுலகில் பதிவெழுத வந்து தொலைத்துவிட்ட அப்பாவி பெண்களின் சார்பில் நன்றி.
\\ இதே போன்ற பகடிகள் இதற்கு முன்னரும் பின்னரும் பிற ஆண் பதிவர்களால் மற்றவர்களை குறி வைத்து எழுதப்பட்ட போதெல்லாம் அப்படிப்பட்ட எதிர்வினைகளை மட்டும்தானே இந்த வலையுலகம் கண்டிருக்கிறது/ காணப்போகிறது? // ஹ்ம்..
தங்கள் இடுகை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, கேள்விகளும்!
அருள் கூர்ந்து உங்கள் மலர்வனத்தை சகதிவனமாக்கவேண்டாம்
நல்ல பதிவு. சொல்லவேண்டியதை எல்லாமே சொல்லிவிட்டீர்கள்.
ஆணின் ஜீனோமில் பொதிந்துள்ள ஆணாதிக்க வெறி மட்டுமே இதன் காரணம். அதுவும் இல்லாமல் சும்மா விட்டுவிடலாம் என்று நர்சிம் நினைத்தாலும் (அவர் அப்படிப்பட்டவர்தான்), அவரை தூண்டி குளிர் காய காத்திருக்கும் கூட்டம் விடாது போலிருக்கு !!!
:(((
பெண்ணியம் பேசுவதாக நினைத்துக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் அக்மார்க் ஆணாதிக்கப் பதிவு (தலைப்பு உட்பட) இது 🙂
நர்சிம் நண்பர்களின் வற்புறுத்தலால் அந்தப் பதிவினை நீக்கிவிட்டார். முதலில் பதிவுபோட்ட விஜயசாந்தி போட்டது போட்டதுதான் என்று இன்னமும் ராங்கு காட்டிக் கொண்டிருக்கிறார். உங்கள் அட்வைஸ்களை கொஞ்சம் அந்தப் பக்கமும் அள்ளித் தெளித்தால் பயனுடையதாக இருக்கும்!
Hats off!! 3rd point deserves a standing ovation.
உண்மையில் தூங்குபவர்களை மட்டுமாவது எழுப்ப முடிந்தாலே வெற்றி தான்!
நடந்த சம்பவங்களை நினைச்சு மனசுக்குக் கஷ்டமா இருக்கு:(
சராசரி ஆட்கள்தான் எல்லாருமே ஆக இந்த வெறுப்பில் இருவருக்குமே சம பங்கு இருக்கிறது.
நர்சிம் சொல்லியிருக்கிற பின்னூட்டத்தில் அவருக்கு தொலைப்பேசி சொல்லிவிட்டு பதிவிட்டிருக்கிறார் ஆனால் வேறொரு வலைத்தளத்தில் பொம்பளைன்னாலே பிரச்சனைதானோ :))))))))))))
பார்த்து… ஆட்டோ வீட்டு வாசலுக்கு வந்திடப் போகுது….
உண்மையில் இதன் பின்னால் நிரம்பியிருக்கும் அரசியலும், குழு மனப்பான்மையும் எனக்கு துளியும் தெரியாதுதான்.
ஆனால் நர்சிம்மின் அந்த பதிவு என்ன காரணத்தினாலும் ஏற்றுக் கொள்ள முடியாத மிகக் கேவலமான பதிவு.
எங்களை மட்டும் சொல்றியே. இவங்க என்ன யோக்கியம் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லைதான். ஆனால் என்ன எழுதினாலும் கோபத்தில் “ஆஃப்டர் ஆல் ஒரு பொம்பளை என்னை எதுத்துக்க முடியுமா” என்ற ரீதியில் எழுதப்படும் கேரக்டர் அசாசினேஷன் வகை எழுத்துக்களுக்கள் ஏற்படுத்தும் கோபத்தை என்ன சொல்லி விவரிப்பது?
இன்னும் சொல்லப் போனால் பிரச்சினையை பிரச்சினைக் காரர்கள் ரெண்டு பேரும் மட்டும் பேசினாங்கன்னா எவ்வளவோ பிரச்சினைகள் ஒண்ணும் இல்லாமப் போயிருக்கும்.
“உனக்கு நான் சப்போர்ட் பண்றேன்னு” கூட இருக்குறவங்க பண்ற வேலையிலதான் இப்படி ஆளாளுக்கு ஆடறதுக்கு காரணமா போயிடுது.
குறைந்தபட்சமாக எனது கடும் கண்டனங்கள்.
//இதன் மூலம் சொல்லப்படும் நீதி யாதெனின், எந்த விஷயமாக இருந்தாலும் பெண்கள் கருத்து சொல்லக் கிளம்பக் கூடாது. அப்படிக் கிளம்பினால் போச்சு, சேலைய உருவிடுவோம் (நிஜத்திலோ அல்லது எழுத்திலோ – எதில் வாய்ப்புக் கிடைக்கிறதோ அதில் உருவுவோம்) என்பதுதான் இந்த செயல்களில் உள்ளர்த்தம்//
இதுதாங்க நிஜம்
well written
உண்மை என்னவென்று புரியாத நிலையில்,எதுவாக இருந்தாலும் ஒரு அம்மாவையும் குழந்தையையும் இப்படி எழுதி இருப்பது கசக்கிறது. பதிவுக்கு மிக மிக நன்றி லக்ஷ்மி.