3 வருடங்களுக்கு முன்பான நினைவென ஃபேஸ்புக் இந்தப் பதிவைக் காட்டியது. வீடடங்கு நாட்களின் வெறுமையையும், சலிப்பையும் கொல்ல, கனியின் நாட்களை முடிந்த அளவு இனிமையானதாக்க என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று நினைத்து சிரித்துக் கொண்டேன்.
இந்த சிவலிங்கத்தை அட்டையில் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. ஆனால் வண்ணம் தீட்டவோ கிட்டத்தட்ட 4 நாட்கள் பிடித்தது. பெரிய பிரஷ் எதுவும் இல்லாமல், கடைகளிலும் வாங்க முடியாத நிலையில், இருந்த ஒவியம் வரைவதற்கான தூரிகையை மட்டும் வைத்துக் கொண்டு, தினமும் கொஞ்ச நேரம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வண்ணம் தீட்டினார் பாலா.
ஆனால் அத்தனை உழைப்பும் சிவனைக் கண்டதும் கனியின் முகத்தில் வந்த புன்னகையில் நியாயப் படுத்தப்பட்டுவிட்டதாகவே தோன்றியது.
அவனே பாகுபலி என்று சொல்லி ஆர்வத்தோடு எடுத்து தோளில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொருமுறை இந்த வீடியோவைப் பார்க்கும்போதெல்லாம், அன்றைய மகிழ்ச்சி துல்லியமாக நினைவுக்கு வருகிறது. அத்துடன் அதற்குப் பின்னிருந்த பாலாவின் உழைப்பும் சேர்ந்து நினைவுக்கு வருகிறது.